Friday 1 September 2017

மூவினங்களை ஒன்றிணைத்த வண்ண கொண்டாட்ட விழா

சுகுணா முனியாண்டி

செபெராங் ஜெயா-
பினாங்கு இளைஞர்களின் வண்ண கொண்டாட்ட விழா பினாங்கு பெஸ்தா வளாகத்தில் முவீனங்களையும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் வகையில் பினாங்கு பெஸ்தா அரங்கில் மிக ச் சிறப்பாக  நடைப்பெற்றது .

இந்நிகழ்வை பினாங்கு மாநில கேளிக்கை சங்கம் , பினாங்கு இளைஞர் பேரவை ஏற்பாட்டில்  இளைஞர் விளையாட்டு துறை ஆதரவோடு நடைப்பெற்றது

இக்காலக்கட்டத்தில் இளைஞர்களிடைய ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம் .இதுபோன்ற நிகழ்வுகள் நன்மை பயக்கும் என பினாங்கு மாநில  இளைஞர் விளையாட்டு துறை உதவி இயக்குநர் விஐயன் குமார் நம்பியார் தெரிவித்தார் .
ஒருகாலத்தில் மஞ்சள் நீராட்டம் நம்மிடையே மெலோங்கி இருந்தது. ஆனால் இக்காலக்கட்டத்தில் நம் கலாச்சார விழாக்கள் மலிந்து போய் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற விளையாட்டுகள் நம் கலாச்சாரத்தை மேலோங்கவும்,  பிற இனத்தினர் நம்முடைய கலாச்சார நிகழ்வை தெரிந்து க் கொள்வதற்கும் பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார் .

இந்நிகழ்வை கெராக்கான் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஜசன் , பினாங்கு மாநில இளைஞர் விளையாட்டு துறை துணை இயக்குநர் விஜயன் ஆகியோர் அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தனர் .
தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்களை அவர்களின் வழியில் சென்று தான் அவர்களை ஈர்க்க முடியும் இல்லையேல் அவர்களை பக்கத்தில்கூட நெருங்க முடியாது .அந்த வகையில் இளைஞர்களை நெருங்கி அவர்களுடனான நட்புறவை சிறப்பாக வளர்த்துக் கொள்ள இந்நிகழ்வு அடித்தளம் அமைக்கும் என நம்புவதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான குகிலன் புஸ்பநாதன் கூறினார்
இந்நிகழ்வின் போது இளைஞர்கள் ஆண் - பெண் என்று பேதமில்லாமலும் இன வேறுபாடுகளை களைந்து ஒரு குடையின் கீழ் இணைந்து வண்ணங்களை முகங்களில் பூசிக் கொண்டும்  வீசியும் மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment