Tuesday 8 May 2018
'எங்கள் வீட்டு பிள்ளை' ஆகிறார் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் - சிகாமாட் தொகுதியில் பெருகும் மக்கள் ஆதரவு
ரா.தங்கமணி
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு சூடு பிடித்துள்ள நிலையில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஶ்ரீ எஸ்.சிவசுப்பிரமணியத்திற்கான மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் இன்று சிகாமாட் மக்களின் இல்லங்களில் ஒருவராக 'எங்கள் வீட்டு பிள்ளை' என பெயரெடுத்து மக்களின் சிறந்த தேர்வாக அமைகின்றார் என்றால் அது மிகையாகாது.
'மக்கள் பிரதிநிதி'க்கு அழகே மக்களின் எத்தகைய ஆதரவை பெற்றுள்ளோம் என்பதை பொருத்துள்ளது. அதன் அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரத்திலும் தொகுதி மேம்பாட்டிலும் காட்டிய அக்கறை, இன்று அத்தொகுதியை பல மடங்கு மேம்படுத்தியுள்ளதோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியுள்ளது.
இந்த 15 ஆண்டுளில் சிகாமாட் தொகுதியில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் மேற்கொண்ட அபரிமிதமான திட்டங்கள் பலநிலை மக்களுக்கு நன்மையளித்துள்ளதோடு அவர்களின் வாழ்வாதார சூழலை
மாற்றியமைத்துள்ளது.
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு, வாழ்வாதார சூழலுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள், மக்களுக்கான தரமான வேலை வாய்ப்புகள் என பல இன மக்களை கவர்ந்துள்ள தலைவராக சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ சுப்ராவுக்கான மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியை தனது 2ஆவது இல்லம் என பறைசாற்றி வரும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், தனது அலுவல் பணிகளை முடித்து விட்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலே மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு களமிறங்குகிறார்.
பல்வேறு அலுவல் பணிகளுக்கு மத்தியிலும் தனது சேவைகளை கைவிடாது மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாலேயே சிகாமாட் மக்களில் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் தானும் ஒரு பிள்ளையாக் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் கருதப்படுகிறார்.
'எங்கள் வீட்டு பிள்ளை' என கருதப்படும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் தங்களின் பிரதிநிதியாக திகழ்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்பது மட்டும் நிதர்சன உண்மையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment