Thursday, 17 May 2018

இன்னமும் குறையாத பெட்ரோல் விலை?

கோலாலம்பூர்-
9ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதில் இன்னும் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை.

14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெட்ரோல் விலை வெகுவாக குறைக்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் பழைய விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரோன் 95 ஒரு லிட்டருக்கு வெ.2.20, ரோன் 97 ஒரு லிட்டருக்கு வெ.2.47, டீசல் ஒரு லிட்டருக்கு  வெ.2.18 என விற்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment