Wednesday 30 May 2018

பாலர்பள்ளி ஆசிரியர்கள் அலவன்ஸ் தொடர்பில் அமைச்சர் குலசேகரனை சந்திக்கிறேன் - டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்


கோலாலம்பூர்-
மலேசிய பாலர்பள்ளி இயக்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய மானியம் தொடர்பில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என 'செடிக்' இலாகாவின் இயக்குனர் பேராசிரியர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வியக்கத்திற்கு 'செடிக்' மூலம் 2016, 2017ஆம் ஆண்டு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான மானியமாக 70 லட்சத்து 31 ஆயிரத்து 316 வெள்ளி (வெ.7,031,316.00) ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் வழி 438 ஆசிரியர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்பட்ட நிலையில் இப்போது ஆட்சி மாற்றத்தினால் ஆசியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களின் அலவன்ஸ் தொகை காலதாமதமாக செலுத்தப்பட்ட நிலையில் ஏப்ரல், மே மாத அலவன்ஸ் எப்போது வழங்கப்படும்? என ஆசிரியர்கள் ஏக்கத்தில் தவிக்கின்றனர்.

இது குறித்து டத்தோ இராஜேந்திரனை 'பாரதம்' இணைய ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அலவன்ஸ் தொகை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால,'செடிக்' மானியம் ஒதுக்கிய நிதி தொடர்பில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுடன் நாளை (30ஆம் தேதி) நேரில் சந்திக்கவிருப்பதாகவும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவிருப்பதாகவும் டத்தோ இராஜேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment