Tuesday 22 May 2018

நிதியமைச்சராக லிம் குவான் எங் பதவியேற்பதில் எவ்வித தடையும் இல்லை- ராம் கர்ப்பால்


ஜோர்ஜ்டவுன் -
கடலடி சுரங்கப் பாதை அமைப்பதில் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று நிதியமைச்சராக பதவியேற்பதில் எவ்வித தடையும் இல்லை என அவரது வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

அவர் (லிம்) குற்றம் புரிந்தது இன்னும் உறுதிபடுத்தப்படாததால் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை.

அரசியல் காரணங்களுக்காக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். ஆனால் சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்ளும் சூழலில் பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங் தற்போது நிதியமைச்சராக பொறுப்பேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.

இன்று லிம் குவான் எங் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதால் பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment