Thursday 24 May 2018

எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை


புத்ராஜெயா-
உலகச் சந்தையில் எண்ணெய் விலை ஏற்றம் கண்டிருந்தாலும் மலேசியாவில் எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும்  இல்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இன்னமும் எண்ணெய் விலை நிலையாக உள்ளதாகவும் அதன் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அவர் கூறினார்.

உலகச் சந்தையில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்வு கண்டுள்ள நிலையில் இங்கு எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே அதாவது கடந்த 22 மார்ச் முதல் எண்ணெய் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment