கோலாலம்பூர்-
1எம்டிபி-யின்
கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நெசனல் நிறுவனத்துக்கு நிதி விநியோகம் செய்யப்பட்டதன்
தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 5 மணி நேரம் செய்தது மலேசிய
லஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி).
காலை 10.00 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமை அலுவககத்திற்கு வருகை புரிந்த அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த டத்தோஶ்ரீ நஜிப், அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் சொன்னார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி விநியோகம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு கடந்த 18ஆம் தேதி எம்ஏசிசி டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நோட்டீஸ் வழங்கியது.
No comments:
Post a Comment