Thursday 17 May 2018

ஜிஎஸ்டி இனி கிடையாது- பிரதமர் உத்தரவு

புத்ராஜெயா-
பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) இனி அரசாங்கம் வசூலிக்காது என்ற உத்தரவை பிரதமர் துன் மகாதீர் முகமது பிறப்பித்துள்ளார்.

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் என்றார் அவர்.

பிரதமரின் இந்த உத்தரவை தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 6 விழுக்காடாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி 0 விகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி கிடையாது என்ற அறிவிப்பு மலேசியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் 60 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தததில் ஜிஎஸ்டி வரியும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment