Friday, 18 May 2018

13 அமைச்சர்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்படுவர் - துன் மகாதீர்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பானின் அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பானின் பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது நிதியமைச்சர், தற்காப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், மகளிர், குடும்ப, சமூக நல அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 13 பேர் பெயர் பட்டியல் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என துன் மகாதீர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment