Tuesday 29 May 2018

தேமுவிலிருந்து விலகி பக்காத்தான் கூட்டணிக்கு 'தாவவில்லை' - டான்ஶ்ரீ கேவியஸ்



கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தேசிய முன்னணியை விட்டு விலகவில்லை; மாறாக, நாங்கள் 'பந்தாட'ப்பட்டதால் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை மைபிபிபி எடுத்துள்ளது என
அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை பெறுவதற்காக பல இன்னல்களை அனுபவித்தோம். முதலில் சேவையாற்றுபவர்களுக்கே தொகுதிகள் என கூறினர். பின்னர் பாரம்பரியம் என சொல்லி கேமரன் மலையில் 4 ஆண்டுகளாக நான் ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்காமல் மஇகாவுக்கு கொடுத்தனர்.

தேமு கூட்டணியில் பங்காளீ கட்சியாக இருந்தபோதிலும் 'பந்தாடப்பட்டோம்'. வெற்றி பெற முடியாத சிகாம்புட் தொகுதியை வழங்கி போட்டியிடுங்கள் என தேமு தலைமை வலியுறுத்தியது.

அதுமட்டுமல்லாது மைபிபிபி கட்சியின் நிர்வாகத்திற்குள்ளேயே தலையிட்டு கட்சிக்குள் பிரிவினையை உண்டாக்கினர். கட்சிக்குள் தலைமைத்துவப் போராட்டத்தை உண்டாக்கி விட்டனர்.



இச்சூழலில் தேமு கூட்டணியில் நீடிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஆட்சியை அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மைபிபிபி 'தாவி' விடவில்லை.

ஒரு சுயேட்சை கட்சியாக இருந்து மக்களுக்கு தேவையான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில் மக்கள் நலனுக்காக நடப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்போம் என டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

No comments:

Post a Comment