Monday 21 May 2018

அல்தான் துயா கொலை; முழு சம்பவத்தையும் அம்பலப்படுத்தத் தயார்- சிருல்


கோலாலம்பூர்-
மங்கோலியா மாடல் அழகி அல்தான் துயா கொலை வழக்கில் என்ன நடந்தது? என்பதை முழுமையாக அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக கூறிய முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் அஸார் உமார், தமக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டால் மலேசியாவுக்கு திரும்புவதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? என்பதை முழுமையாக கண்டறிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு தாம் உதவ தயாராக இருக்கிறேன் என 'மலேசியா கினி'க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.

என் மீது இந்த ஒரு குற்ற வழக்கு மட்டுமே உள்ளது. இதற்கு முன்னர் எத்தகைய குற்றத்தையும் நான் செய்ததில்லை. எனக்கு வேறு குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பலர் என்னை அரசியல் கைதியாகவே பார்க்கின்றனர்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் எனக்கு சொன்னதை மட்டுமே செய்தேன். ஆயினும் வழக்கு நடத்தப்பட்ட முறையில் தான் அதிருப்தி கொண்டிருந்தேன்.

அல்தான் துயா கொலை வழக்கில்  மிக முக்கிய சாட்சியான ஒருவர் கடைசி வரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவே இல்லை என குறிப்பிட்ட அல்தான் துயா வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள கோரிக்கையை தான் வரவேற்பதாக கூறினார்.

அல்தான் துயா கொலை வழக்கில் சிருச் அஸாருக்கும் மற்றொரு போலீஸ்காரர் அஸிலா ஹட்ரி என்பவருக்கும் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது. ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற சிருல் குடிநுழைவுச் சட்டத்தை மீறியதற்காக கைதி செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment