Monday 7 May 2018

தல பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய மலேசிய தல இரசிகர்கள்




தெனிந்திய சினிமாவில் தனக்கென தனி வழியையும் தனக்கான இரசிகர்களுக்காகவும் மாறுபட்ட திரைக்கதையையும் கையாண்டு தனக்கென அடையாளத்தை பதித்த ஒரே நடிகர் தல எனலாம். அவருடைய பிறந்தநாள் கடந்த மே 1. உலகமெங்கும் உள்ள அவரது இரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை வித்தியாசமாகவும் பயனாகவும் கொண்டாடப்பட்டது.

மலேசியாவை பொருத்தமட்டில் மலேசிய தல அஜித் நற்பணி மன்றம் பல்வேறு நடவடிக்கைகளும் சமூகநலத் திட்டங்களும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு அவருடைய 47வது பிறந்தநாளை இங்குள்ள செமினி, லோட்டஸ் சேரட்டி ஹோமில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் மலேசிய தல இரசிகர் மன்றம், ஏ.ஆர்.ராஹ்மான் இரசிகர் மன்றம் மற்றும் ரஜினி இரசிகர் மன்றம் ஆகிய குழுவினர்கள் கலந்துச் சிறப்பித்தனர்.


செமினி, லோட்டஸ் சேரட்டி ஹோம்மை சார்ந்த 60 பேருக்கு பரிசு பொருட்களும் அவர்களுடன் ஒரு மாலை பொழுதைக் கழித்தோம். இது எங்களது முதல் நிகழ்வு அல்ல. நாங்கள் அவருடைய படங்களுக்கு மட்டும் இரசிகர்கள் அல்ல அவருடைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணையாகவும் அவர் பெயரில் பல சமூகநல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

அதில், தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் எங்களது நற்பணிகள், புட்சால் போட்டிகள், கருனை இல்லதிலுள்ளவர்களுக்கு உதவிகளும் நற்பணிகளும் செய்து வருகின்றோம் என்று மலேசிய தல அஜித் நற்பணி சங்கத் தலைவர் தேவேந்திரன் கூறினார்.

மேலும், ஸ்டர்லைட் மற்றும் காவிரிக்காக மக்கள் போராடி வருவதால் நாங்கள் அவருடைய பிறந்தநாளை மிக எளிதான முறையில் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்தோம் என்றார்.

No comments:

Post a Comment