Thursday 24 May 2018

தேமுவையும் நஜிப்பையும் மக்கள் ஏற்கெனவே தண்டித்து விட்டனர்- டத்தோ சிவராஜ்

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் வழி மக்கள் தேசிய முன்னணியையும் டத்தோஶ்ரீ நஜிப்பையும் ஏற்கெனவே தண்டித்து விட்டனர் என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் சுட்டிக் காட்டினார்.

வாக்களிப்பின் வழிஏற்கெனவே மக்கள் தண்டித்துள்ள நிலையில்  நஜிப்பையும் இந்த கூட்டணியையும் மக்கள் 'கடுமையாக' விமர்சிக்க வேண்டாம்.

14ஆவது தேர்தலின் வழி ஏற்கெனவே தண்டித்து விட்டதாக நான் உணர்கிறேன். இனியும் தேமு தலைவர்களை விமர்சிப்பதில் ஒன்றுமில்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீது விசாரணை நடத்துவது அரசாங்கத்தின் உரிமையாகும். ஆனால், அதே சமயம் அந்த 'முன்னாள் தலைவரை' வழிநடத்தும் அரசு இலாகாக்களின் நடவடிக்கையை சமூக ஊடகங்களின் வழி சிலர் விமர்சனம் செய்வது ஏற்புடையதாக இல்லை.

நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்படும் வரை டத்தோஶ்ரீ நஜிப் தற்போது வரை குற்றமற்றவர் ஆவார் என இன்று நடைபெற்றசெய்தியாளர் சந்திப்பில் சிவராஜ் கூறினார்.

அண்மையில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் கைப்பை,  பணம் உள்ளடக்கியபொட்டலங்கள் ஆகியவற்றின் படங்களை வைத்து  நஜிப்பையும் அவரின் மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மாவையும் சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருவோரை சுட்டிக் காட்டி டத்தோ சிவராஜ் இவ்வாறு கூறினார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் அண்மையில் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் பலமணி நேர சோதனையை போலீசார் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment