Friday 18 May 2018

நஜிப்பின் வீட்டிலிருந்து 284 ஆடம்பர கைப்பைகளும் 72 பைகளில் ரொக்கமும் பறிமுதல்



கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டின் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பல்வேறு பொருட்களும் ரொக்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

284 வகையான ஆடம்பர கைப்பைகளும்   72 பைகளில் ரொக்கமும் நகைகளையும் போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

நேற்றிரவு தொடங்கி டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க முடியவில்லை என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு  பிரிவு இயக்குனர் டத்தோ அமார் சிங் இஸ்ஹார் சிங் கூறினார்.

No comments:

Post a Comment