கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பானின் அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகம்மட் வி முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்புச் சடங்கில் பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராக பதவியேற்றார்.
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண்மணி துணைப் பிரதமராக பதவியேற்றுள்ள பெருமைக்குரியவராக டத்தோஶ்ரீ வான் அஸிஸா திகழ்கிறார்.
No comments:
Post a Comment