Saturday 19 May 2018

நஜிப் கால அமைச்சர்களை பக்காத்தான் ஹராப்பான் ஏற்காது பிரதமர் திட்டவட்டம்



பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தில் இடம்பெற்றிருந்த  அமைச்சர்களை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் ஏற்காது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்ற கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

கட்சி தாவலால் தற்போது எதிர்தரப்பு கூட்டணி பல்வேறு சிக்கலைகளை எதிர்நோக்கியுள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் தத்தம் கட்சிகளிலிருந்து வெளியேறி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைய முற்படுகின்றனர்.

எதிர்தரப்பில் உள்ளவர்கள் பக்காத்தானுடன் இணைய விரும்பினால், முதலில் அவர்கள் தங்களை சுயேட்சையாக அறிவித்து கொண்ட பின்னர், பக்காதானுக்கு ஆதரவு அளிப்பதாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.  அதன் பின்னர் அவர்களின் இணைப்பு குறித்து ஆராயப்படும்.

தற்போது வரை பக்காத்தான் கூட்டணியில் அவர்களை இணைப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது, ஆனால் வரும் காலங்களில் இந்த முடிவில் மாற்றம் காணப்படுமா? என்பது தலைமைத்துவ கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment