Saturday 19 May 2018

ஊடகவியலாளர்களிடம் பேச மறுத்தார் நஜிப்


கோலாலம்பூர்-
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக புத்ரா உலக வாணிப மையத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ஊடகவியலாளர்களிடம் பேச மறுத்தார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக டத்தோஶ்ரீ நஜிப்புடன் முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின், அன்வார் மூசா ஆகியோரும் உடனிருந்தனர்.

தொழுகைக்குப்  பின்னர் வெளியே வந்த டத்தோஶ்ரீ நஜிப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட வேளையில், அவர்களுடன் பேச மறுத்து அம்னோ தலைவர்களுடன் ஓர் அறையில் நுழைந்தார்.


No comments:

Post a Comment