Wednesday 23 May 2018

அல்தான் துயா கொலை வழக்கில் மீண்டும் விசாரணை?; அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் - ஐஜிபி


புத்ராஜெயா-
மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கு மீண்டும் விசாரிப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் என  தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ  முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

'அக்கொலை வழக்கை மீண்டும் திறப்பதற்கு என்னுடைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

மங்கோலிய மாடல் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment