Thursday 31 May 2018

சகதி நீரில் தட்டுகளை கழுவுவதா? பங்சார் உணவகத்தை மூடியது டிபிகேஎல்


கோலாலம்பூர்-
சகதி நீரில் உணவு தட்டுகளை கழுவும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பங்சாரில் செயல்பட்டு வந்த ராஜ்'ஸ் உணவகத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)மூடியுள்ளது.

சுகாதார பாதுகாப்பை காரணம் காட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் சுகாதார பிரிவின் துணை இயக்குனர் சந்திரகாந்த் பட்டேல் தெரிவித்தார்.

சமையல் அறையில் முறையான கழுவும் வசதியை கொண்டிராதது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், இன்றுக் காலை சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்ற அதிகாரிகள் அதனை மூடினர்.

மறு அறிக்கை வெளியிடப்படும் வரை அந்த உணவகம் மூடப்பட்டிருக்கும் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட உணவக ஊழியர்கள்  தேங்கி கிடக்கும் சகதி நீரில் உணவு தட்டுகளை கழுவும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
இச்சம்பவம் தற்போது நடந்தது எனவும் இக்காணொளியில் இடம்பெற்றுள்ள ஊழியர்கள் புதியவர்கள் என்பதால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் உணவகம் இதற்கு முன் மாநகர் மன்றத்தின் சுகாதார சான்றிதழை பெற்றுள்ளது என அதன் உரிமையாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment