Tuesday 29 May 2018

இந்தியர்களின் முதலீட்டு, சொத்துடைமை திட்டங்களை ஆராய சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்படலாம்- குலசேகரன்


ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் முதலீடு செய்துள்ள திட்டங்கள் மட்டுமின்றி இந்தியர்களுக்கு சொந்தமாக வேண்டிய சொத்துடைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படலாம் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்ன் தெரிவித்தார்.

இந்தியர்கள் முதலீட்டுத் திட்டங்களான மைக்கா ஹோல்டிங்ஸ், பெஸ்தினோ, ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், டிஎன்பி, டெலிகோம் பங்குகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சுயேட்சை விசாரணை மன்றம் அமைக்கப்படலாம்.

இங்குள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் மூலம் பல சொத்துடைமை பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இன்னும் சில திட்டங்களில் இந்தியர்களே தானாக முதலீடு செய்தனர்.

ஆனால் அவற்றில் பல திட்டங்கள் தோல்வி அடைந்த நிலையில் அதனால் இந்தியர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தனர்.இன்னும் பல திட்டங்களில் முதலீட்டு பணம் கிடைக்காமலே உள்ளது.

இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் அதன் மூலம் அவற்றின் இன்றைய நிலை ஆராயப்படும் என குலசேகரன் சொன்னார்.

No comments:

Post a Comment