Wednesday 23 May 2018

லஞ்சம் கொடுக்க முன்வந்தார் ஓர் 'அமைச்சர்'?


புத்ராஜெயா-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான விசாரணையை முடித்து கொள்ள என்ன வேண்டுமெனாலும் தருகிறேன் என வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர் தம்மை 2 முறை நச்சரித்ததாக மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ சுக்ரி அப்துல் அதிரடியான தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.

1எம்டிபியின் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நெசனல் நிறுவனம் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டில் தாம் மேற்கொண்ட விசாரணையை தடுத்து நிறுத்த டத்தோஶ்ரீ நஜிப்பின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அந்த அமைச்சர் தமக்கு லஞ்சம் வழங்க முன்வந்தார்.

ஆனால், இந்த விசாரணையை நிறுத்த முடியாது “என் நடவடிக்கையில் மீண்டும் தலையிட்டால் உங்களை கைது செய்வேன்” என அந்த அமைச்சரவை தாம் எச்சரித்ததாக டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி தெரிவித்தார்.

ஆயினும், அந்த அமைச்சர் 1எம்டிபி, எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பான விசாரணைகளில் சம்பந்தப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிடார்.


No comments:

Post a Comment