Thursday 17 May 2018

தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்- டத்தோஶ்ரீ சுப்ரா அதிரடி

கோலாலம்பூர்-
விரைவில் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் மஇகா தேசிய தலைவர் பதவியை தற்காக்க போவதில்லை என அதிரடியாக அறிவித்த டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், அந்த பதவிக்கு யார் வேண்டுமனாலும் போட்டியிடலாம் என்றார்.

ஜூலை 29ஆம் தேதி கட்சியின் தலைவர்களுக்கான தேர்தலில் தாம் களமிறங்கவில்லை. அதனால் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமனாலும் போட்டியிடலாம் என இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தில் அவர் இதனை அறிவித்தார்.


இந்த தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்பதோடு யாருக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சிகாம்புட் நாடாளுமன்ற தொகுதில் போட்டியிட்டு தோல்வி கண்டபோதே தாம் மஇகா தேசியத் தலைவர் பதவியில் வகிக்கபோவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜூலை 29ஆம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் தேர்தலும் ஜூன் மாதம் கட்சியின் தொகுதி, கிளை, மாநிலம், மத்தியச் செயலவைக்கான தேர்தலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment