கோலாலம்பூர்-
மங்கோலியா மாடல்
அழகி அல்தான் துயா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின்
அதிபர் கால்ட்மாகின் பத்துலாகா கோரிக்கை விடுத்தார்.
கடந்த 2016ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட அல்தான் துயா கொலை வழக்கு இன்று வரையிலும் முழுமையாக தீர்க்கப்படாமல் உள்ளது,
முற்றுப்புள்ளி வைக்கப்படாத இந்த கொலை வழக்கு தொடர்பில், மங்கோலிய நாட்டு மக்கள் மட்டுமல்லாது மலேசியர்களும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இக்கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்டுள்ள அல்தான் துயா குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவின் 7ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள துன் மகாதீருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் மூடி மறைக்கப்பட்ட அல்தான் துயா கொலை வழக்கில் உண்மை வெளி கொணரப்பட வேண்டும் என அதிபர் கால்ட்மாகின் பத்துலாகா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment