Tuesday 22 May 2018

1எம்டிபி ஊழலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது - பிரதமர் துறை இலாகா



கோலாலம்பூர்-
1எம்டிபி-இல் நிகழ்ந்துள்ள ஊழல், முறைகேடுகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள சிறப்பு குழுவை அரசாங்கம் இன்று அமைத்துள்ளதாக பிரதமர் துறை இலாகா தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த  உயர்நிலை அதிகாரிகள்  இந்த சிறப்புக் குழுவில் இடம்பெறுவர் என பிரதமர் துறை இலாகா வெளியிட்ட அறிக்கை கூறப்பட்டுள்ளது.

மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி), சட்டத்துறை இலாகா, அரச மலேசிய போலீஸ் படை, பேங்க் நெகாரா மலேசியா உட்பட பல்வேறு நீதிபதிகளும் நிபுணர்களும் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

முன்னாள் தலைமை நீதிபதி டான்ஶ்ரீ அப்துல் கனி பட்டேல், எம்ஏசிசி முன்னாள்  தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அபு காசிம் முகம்மட், ஏம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ முகமட் சுக்ரி அப்துல், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் முன்னாள் முதன்மை அதிகாரி டத்தோ அப்துல் ஹமிட் படோர் ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவுக்கு தலைமையேற்பர் என அவ்விலாகா குறிப்பிட்டுள்ளது.

1எம்டிபி விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளவும் அதன் நிர்வாகத்தில்  தவறு இழைத்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு ஏதுவாக  சிறப்பு விசாரணை குழுவை அமைப்பதற்கு பிரதமர் துன் மகாதீர் முகம்மது அனுமதி வழங்கியுள்ளதாக  பிரதமர் துறை இலாகா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment