Saturday 19 May 2018

நஜிப்பை விசாரணைக்கு அழைத்தது எம்ஏசிசி


கோலாலம்பூர்-
ஒரே மலேசியா  மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு நிதி விநியோகம் செய்யப்பட்டது தொடர்பில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கை விசாரணைக்கு அழைத்துள்ளது மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி).

இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு டத்தோஶ்ரீ நஜிப்புக்கு எம்ஏசிசி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை டத்தோஶ்ரீ நஜிப் எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்து விளக்கங்களை வழங்குமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தவலறிந்தவர் கூறினார்.

இன்று 3.50 மணியளவில் ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்துள்ள நஜிப்பின் இல்லத்திற்கு வந்த எம்ஏசிசி-யைச் சேர்ந்த 8 அதிகாரிகள் இந்த நோட்டீசை வழங்கினர்.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அபாண்டி அலி  260 கோடி வெள்ளி நன்கொடை, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஆகியவை எவ்வித குற்றச் செயல்களிலும் தொடர்பில்லை என இதற்கு முன் கூறியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்புடைய மூடப்பட்ட மூன்று கோப்புகளை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தும்படி எம்ஏசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment