Thursday 17 May 2018

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவருடனும் ஒத்துழைப்பேன்- கேசவன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும்  மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்துத்  தரப்பினருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என இத்தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கூறினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த சுங்கை சிப்புட் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேட்புமனுத் தாக்கலின்போது மட்டுமே களமிறங்கிய தனக்கு இத்தொகுதி மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்.

இங்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மட்டுமல்லாது பல்வேறு மேம்பாட்டு, வாழ்வாதாரப்  பிரச்சினைகளும் நிலவுகின்றன. மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்.

அதன் அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன். மஇகா, முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் ஆகியோரிடம் உள்ள மக்கள் பிரச்சினைகள் அடங்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு அதற்கு தீர்வு காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் எந்நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறிய கேசவன், மத்திய, மாநில அரசு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment