Tuesday 29 May 2018
மகாத்மா காந்தி கலாசாலையின் சுற்றுச் சுவர் வேலியை சீரமைக்க வெ.10,000 மானியம்- சிவநேசன்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மகாத்மா காந்தி கலாசாலையின் சுற்றுச்சுவர் வேலியை சீரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்த சுற்றுச்சுவர் வேலியை சீரமைப்பதற்காக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 10,000 வெள்ளி வழங்குவதாக கூறிய அவர், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இன்னும் ஆக்ககரமாக செயல்பட ஒத்துழைப்பு நல்கப்படும் என்றார்.
அண்மையில் மகாத்மா காந்தி கலாசாலைக்கு வருகை புரிந்த சிவநேசனிடம், பள்ளி நிலவரம் குறித்து தலைமையாசிரியை திருமதி சாந்தகுமாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி ஆகியோர் விவரித்தனர்.
மழை காலத்தின்போது பள்ளிக்கு அருகிலுள்ள ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து பள்ளிக்குள் புகுவதால் பெரும் சேதம் எதிர்கொள்வதாக குறிப்பிட்ட கோபி, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இலாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவநேசன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment