Thursday 31 May 2018

அந்நிய நாட்டவரிடம் 'கைநீட்டும்' அதிகாரியின் அத்துமீறல் -வைரலாகும் காணொளி

கோலாலம்பூர்-

அந்நிய நாட்டவர் ஒருவரை கை நீட்டி அடிக்கும் குடிநுழைவுத் துறை அதிகாரியின் அத்துமீறிய செயல் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஜோகூர்பாருவில் உள்ள குடிநுழைவுத் துறை  அலுவலகத்தில் அந்நிய நாட்டவர் கைரேகை பதிவு செய்யப்படும் நடவடிக்கையின்போது சம்பந்தப்பட்ட அதிகாரி அவரை தலையில் 'அடித்ததோடு' மிகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது மலேசிய குடிநுழைவுத் துறை இலாகா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பொது மக்களுக்கு சேவை வழங்குவோர் அந்த இலாகாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில், இச்சம்பவத்தை கடுமையாக கருதுவதாகவும் சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment