தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்சை மீண்டும் வாங்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது என பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.
1984இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது பெரும் கோடீஸ்வரர் டான்ஶ்ரீ சைட் மொக்தார் அல் புகாரி உரிமையாளராக உள்ளார்.
இந்நிறுவனத்தின் 49.9 விழுக்காடு அரசு பங்குகளை முன்னாள் பிரதமர்
டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சீனாவின் 'கெலி' நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
விற்கப்பட்ட இந்த நிறுவனத்தை மீண்டும் வாங்கும் எண்ணம் கிடையாது என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment