Thursday 17 May 2018

டத்தோஶ்ரீ நஜிப் இல்லத்தில் சோதனை; போலீஸ் குவிப்பு



கோலாலம்பூர்-
1எம்டிபி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் மத்திய வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகிறனர்.

ஜாலான் டூத்தாவில் உள்ள டத்தோஶ்ரீ நஜிப் இல்லத்தின் முன்பு 12க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இல்லத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர் டத்தோ அமார் சிங் உடனிருக்கிறார்.

இச்சோதனை நடவடிக்கை பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில் டத்தோஶ்ரீ நஜிப் இல்லத்தின் முன்பு போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் பெரும் அளவில் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment