கோலாலம்பூர்-
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பி.பிரபாகரனுக்காக அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா பிரச்சாரம் செய்வது தவறில்லை என மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.'
வழக்கு ஒன்றில் நீதிமன்றம் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பன் சார்பில் வேட்பாளர்கள் இல்லாததால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பிரபாகரனுக்கு ஆதரவாக தியான் சுவா பிரச்சாரம் செய்கிறார்.
Advertisement
இது குறித்து கருத்துரைத்த தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறும் குற்றம் எதனையும் தியான் சுவா புரியவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment