Monday 7 May 2018

கண்டெடுத்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு வெ.1 லட்சம் மானியம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
புந்தோங், ஜாலான் வாயாங்கிலுள்ள கண்டெடுத்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு 1 லட்சம் வெள்ளிக்கான காசோலையை ஈப்போ பாராட் மஇகா தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜு வழங்கினார்.

கடந்த முறை மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஜெலாப்பாங் தேர்தல் நடவடிக்கை மையத்திற்கு வருகை புரிந்தபோது  80 வருடம் பழைமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

1 லட்சம் வெள்ளிக்கான காசோலை ஆலயத் தலைவர் பி.பாலசுப்பிரமணியத்திடம் அவர் வழங்கினார்.  புந்தோங் தேமு வேட்பாளர் திருமதி தங்கராணியும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment