ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கான (பக்காத்தான் ஹராப்பான்) ஆதரவு மக்களிடத்தில் பெருகி வருகிறது எனவும் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர் எனவும் சுங்காய் சட்டமன்றத் தொகுதி பிகேஆர் வேட்பாளர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
சுங்காய் தொகுதியில் பிகேஆர் கட்சிக்கு வலுவான ஆதரவு பெருகி உள்ளதோடு மீண்டும் இத்தொகுதியில் வெற்றி பெறுவேன் என கூறிய சிவநேசன், பீடோரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டது மாபெரும் வரலாறாகும் என அவர் குறிப்பிட்டார்.
Advertisement
ஆட்சி மாற்றத்திற்கான முழக்கம் தொடங்கி விட்டது. முன்புபோல் மக்கள் இல்லை, இன்றைய வாக்காளர்கள் தெளிவான சிந்தனையில் உள்ளனர். மாற்றத்தை விரும்பும் மக்கள் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவர் என்றார் அவர்.இந்த மக்கள் சந்திப்பில் ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் உட்பட பலர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment