Tuesday 8 May 2018

10 வருஷம் கொடுத்தோமே; என்ன மாற்றத்த கொடுத்தீங்க?' - எதிர்க்கட்சியை விளாசினார் மூதாட்டி கெளரவம்மா

கோ.பத்மஜோதி
சுங்கை சிப்புட்-
'10 வருஷமா எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கொடுத்துமே; என்ன மாற்றத்த கொடுத்தீங்க' என மூதாட்டி கெளரவம்மா ஆதங்கத்துடன்  தெரிவித்தார்.

சுங்கை சிப்புட்டில் துன் ச.சாமிவேலு  தோற்ற பிறகு எவ்வித முன்னேற்றமும் கண்டிராத நிலையில் இன்னும் எத்தகைய மாற்றம் வேண்டும்?
கடந்த காலங்களில் கம்பீரத்துடன் காணப்பட்ட சுங்கை சிப்புட், எதிர்க்கட்சியின் பிடியில் சோடை போன தொகுதியாக காட்சியளிக்கிறது.

எதிர்க்கட்சியிடம் இத்தொகுதியை கொடுத்ததால் எவ்வித மேம்பாடும் மக்களின் முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் சுங்கை சிப்புட் மீண்டும் தனது கம்பீரத்தை பெற தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார்.
வீடியோ இணைப்புக்கு:
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமையில் தேசிய முன்னணி அரசாங்கம் பல நலத் திட்டங்களை மக்களுக்காக முன்னெடுத்துள்ள நிலையில் சுங்கை சிப்புட்டில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ தேவமணி வெற்றி பெற்றால் நிச்சயம் மக்கள் பல்வேறு மேம்பாடுகளை காண்பர் என அவர் கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment