Sunday 6 May 2018

எதிர்க்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்- டத்தோஶ்ரீ சுப்ரா


ரா.தங்கமணி

சிகாமாட்-
வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்கட்சியினர் பரப்புரை செய்யலாம். இத்தகைய அரசியல் தூய்மையான அரசியலாக கருதப்படாது என  சிகாமாட் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்புரை செய்யலாம்.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதே எதிர்க்கட்சியினரினர் திட்டமாக உள்ளது. எதிர்க்கட்சியினரின் பொய்ய்யான வாக்குறுதிகளில் நம்பி மக்கள் ஏமார்ந்து விடக்கூடாது என மக்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு சொன்னார்.

உண்மையான போராட்டத்தை முன்னெடுத்து மக்களின் ஆதரவை பெற வேண்டுமே தவிர பொய்யான தகவல்களை திணித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறக்கூடாது. அத்தகைய நடவடிக்கை நேர்மையான அரசியலை பிரதிபலிக்காது என  டத்தோஶ்ரீ சுப்ரா மேலும் கூறினார்.

இந்த மக்கள் சந்திப்பில் தேமுவுக்கு  ஆதரவாக களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்ட டத்தோஶ்ரீ ஹிஷாமுடினுக்கு டத்தோஶ்ரீ சுப்ரா தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment