Monday 7 May 2018

டத்தோஶ்ரீ தேவமணி வெற்றி பெற்றால் ஓராண்டு காலத்தில் சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் - இளங்கோவன் முத்து (வீடியோ இணைப்பு)


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சாலாக் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளது இங்குள்ள மக்களுக்கு ஒரு நற்செய்தியாகும் என சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து கூறினார்.

நீண்ட கால கோரிக்கையான சாலாக் தமிழ்ப்பள்ளி புதிய இடத்தில் புதிய கட்டடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் அறிவிப்பு அமைந்துள்ளது.

தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி  இத்தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஓராண்டு காலத்திற்குள் சாலாக் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தை பெறும் என அவர் சொன்னார்.

வீடியோவை காண:

No comments:

Post a Comment