Sunday 13 May 2018

பேராவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி; சுல்தான் முடிவை மதிக்கிறோம்- டத்தோஶ்ரீ ஸம்ரி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தேசிய முன்னணியைச் சேர்ந்த இருவர் கட்சி தாவியதை அடுத்து பேரா மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ள பக்காத்தான் ஹராப்பான் முடிவை ஏற்கிறோம் என பேரா தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைப்பதற்கு 31 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதால் பேரா சுல்தான் நஸ்ரின் ஷா எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுகிறோம் என அவர் சொன்னார்.

29 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு இரு தேமு சட்டமன்ற உறுப்பினர்கள் தாவியதை அடுத்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அக்கூட்டணி பெற்றுள்ளது.

இதனிடையே, 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன்  பாஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்  பேரா மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என் இதற்கு முன் பேரா தேசிய முன்னணி கூறியது.

No comments:

Post a Comment