Tuesday 1 May 2018

தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் தங்கராணி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு புந்தோங் சட்டமன்றத் தொகுதியில்  தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள திருமதி தி.தங்கராணி தனது தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் திருமதி தங்கராணி, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதோடு தனது தேர்தல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வசமுள்ள இத்தொகுதியை இம்முறை தேசிய முன்னணி வென்றெடுக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படும் தங்கராணி, புந்தோங் வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை களைவதற்கான திட்டங்களை முன்வைத்து தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

No comments:

Post a Comment