Tuesday 1 May 2018

'ஆட்சிக்குழு உறுப்பினர்' பதவி; 'அதிர்ஷ்டக் காற்று' யார் பக்கம் வீசும்?


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில அரசியல் களத்தில் சுங்காய் சட்டமன்றத் தொகுதி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த தொகுதியாக தற்போது மாறி வருகிறது.

பேரா மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி யார் கைப்பற்றினாலும் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து ஆட்சிக்குழுவில் அமரக்கூடியவர் யார்? என்ற எதிர்பார்ப்பே சுங்காய் தொகுதி மீதான கவனத்தை ஈரித்துள்ளது.

இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக பேரா மஇகா தலைவர் டத்தோ இளங்கோ களமிறங்கியுள்ள நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளராக அ.சிவநேசன் களமிறங்கியுள்ளார்.

டத்தோ இளங்கோ பேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்துள்ள நிலையில் தற்போது இங்கு வெற்றி பெற்றால் அவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்பார் என நம்பப்படுகிறது. டத்தோ இளங்கோ வெற்றி பெற்றால் தேமு தலைமையில் ஆட்சிக்குழுவில் நிச்சயம் டத்தோ இளங்கோ இடம்பெறுவார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார்.

அதேபோன்று பக்காத்தான் ஹராப்பான் பேரா மாநில ஆட்சியை கைப்பற்றினால் சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியேற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு பேரா மாநில ஆட்சியை மக்கள் கூட்டணி (பக்காத்தான் ராக்யாட்) கைப்பற்றியபோது சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். இப்போது மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் மாநில ஆட்சியை கைப்பற்றினால் அந்த 'பழைய' ஆட்சிக்குழுவே பதவியேற்கலாம் என்ற நிலையில் சிவநேசனுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி உறுதியாக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரில் யார் ஆட்சிக்குழுவில் அமரவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment