Wednesday 9 May 2018

பேராவில் மீண்டும் தேமு ஆட்சியே - தங்கராணி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வரும் போது தேர்தலில் பேரா மாநில அரசை தேசிய முன்னணியே தக்க வைத்துக் கொள்ளும் என புந்தோங் தேமு வேட்பாளர் திருமதி தங்கராணி கூறினார்.

நான் புந்தோங்கில் வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்பே இங்குள்ள மக்களுக்கு நன்கு சேவையாற்றியுள்ளேன்.  நான் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை சமூக ஊடகங்களில்  விளம்பரப்படுத்தியது கிடையாது.

ஆனால் என் சேவைகள் என்னவென்பதை இங்குள்ள மக்கள் நன்கு அறிவர். புந்தோங்கிற்கு நான் புதியவள் கிடையாது. ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தான் என்னை பார்த்தே கிடையாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அவர் குடியிருக்கும் வீட்டிலிருந்து 5ஆவது வீடுதான் என் வீடு; அது கூட தெரியாமல் அவர் அறிக்கை விடுகிறார். அவர் கடந்து செல்லும் பாதையில் என் வீடு உள்ளது என்பதை அவருக்கு நினைவுறுத்தி கொள்கிறேன் என ஈப்போ பாராட் மஇகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மஇகா/  தேசிய முன்னணி என்ன செய்தது என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கடந்த 10 ஆண்டு காலத்தை கடந்து விட்டார். புந்தோங் தொகுதி மக்களின் பிரச்சினைகளை கலைந்து உருமாற்றத் திட்டங்களை முன்னெடுக்கவே இங்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.

33 ஆண்டுகால ஆசிரியர் பணியில் நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கிய என்னால், இந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் புந்தோங் தொகுதியை சிறந்த தொகுதியாக உருமாற்றுவேன்.

கடந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய திருமதி தங்கராணி, எதிர்க்கட்சியினரால் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து மக்களுக்கு சேவையாற்றும் தேமு வேட்பாளரை வெற்றியடையச் செய்யுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஈப்போ பாராட் தொகுதி மஇகா தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ராஜு , ஜெயகோபி, நேசக்கரங்கள் இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் அனைவரும் இந்நிகழ்வில் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், அதிஷ்டக்குலுக்கு க்கல் என சிறப்பான அங்கங்கள் இடம்பெற்றன.

No comments:

Post a Comment