Monday 7 May 2018

தீவிர பிரச்சாரத்தில் தேசிய முன்னணி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீட்டெடுக்கும் வகையில் தேமு வேட்பாளர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வசமான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க தொகுதி மஇகா பாடுபட்டு வருகிறது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேசிய முன்னணி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

மக்களை சந்திப்பது, குறைகளை கேட்டறிவது, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment