Saturday 5 May 2018

மக்களின் தேவையை அறிந்து சேவையாற்றும் தலைமைத்துவமே சிகாமாட் மக்களுக்குத் தேவை - கார்த்திகேசு


சிகாமாட் மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக இங்கு பல பொதுப்பணி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வளர்ச்சிக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் .சுப்பிரமணியம் மிகவும் பங்காற்றியுள்ளார் என்பதை யாராலும் மறக்க முடியாது என்றும் அவரது நற்சேவை இந்நாடாளுமன்றத்தில் தொடர வேண்டும் என்றும் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகவும் சிகாமாட் வட்டாரத்தைச் சார்ந்த திரு கார்த்திகேசு குறிப்பிட்டுள்ளார்.

சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான திரு கார்த்திகேசு அவர்கள் ஒரு காலக்கட்டத்தில் எதிர்கட்சி அணியில் செயலாற்றி வந்ததாகவும் டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் சேவை மனப்பான்மை, மக்கள் மீது கொண்டுள்ள நலன், கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்திலும் ஈர்க்கப்பட்டு அவரின்பால் மரியாதையும் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வித பாகுபாடுகளிமின்றி சிகாமாட் மக்களுக்கு அவர் ஆற்றி வரும் சேவையின் காரணத்தால் வேறு எவரிடமும் தமது பள்ளிக்காக உதவி கேட்டுப் போகும் நிலை ஏற்படவில்லை மற்றும் தேவையான சேவையை வாய்விட்டுக் கேட்கும் முன்னமே அறிந்து செய்து கொடுக்கும் ஆற்றல் அவருக்கும் இருப்பதாக நெகிழ்கிறார் கார்த்திகேசு.

தொடர்ந்து பேசிய அவர், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தொடங்கிய காலம் தொட்டு இது வரையில், ரிம 433,781,276.00 பொருட்செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுள்ளன. இதில் இரண்டாம் கட்டத் தூமாங் சாலை மேம்பாட்டுத் திட்டம் சிகாமாட் ( கம்போங் பாயா லாங் பத்து அன்னம்), பழங்குடி மக்கள் கிராமம் தொடக்கம் கிழக்கு பெல்டா பாலோங் வரையிலான சாலை நிர்மாணிப்பு, முதல்கட்டப் பணியாக புக்கிட் புஜாங் பலாய் பாடாங்கிலிருந்து மென்சுடுத் லாமா சாலை நிர்மாணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிகாமாட் திட்டங்களில் சில காட்சிகள்

தற்போது
, ரிம 166,900,000.00 செலவில் குவாலா பாயா-பாலாய் பாடாங் J155 பால மாற்று வேலைகள், சிகாமாட் சாலை நிர்மாணிப்புத் திட்டத்தில் 2-ஆம் கட்டமாக ஜாலான் செபாயா - புக்கிட் பூஜாங் பாலாய் பாடாங்கில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தவிர்த்து, கம்போங் செபீனாங்கில் புதிய மசூதி நிர்மாணிப்புப் பணிகளும், சிகாமாட் மருத்துவமனையில் இணைக்கட்ட நிர்மாணிப்புப் பணிகளும் சுமூகமாக நடைப்பெற்று வருகின்றது.

அது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத் திட்டங்களாக ரிம 66, 100,000 செலவில் நான்கு  கட்டுமானப் பணிகள் மிக விரைவில் நடக்கவுள்ளது. இதில், சிகாமாட் ஜாலான் மூவாரில் சுகாதார மைய மேம்பாடு, ஜாலான் சுல்தான் - லுபோக் பாத்து பாலம் மேம்பாட்டுப் பணிகள் அடங்கும். மக்களின் தேவையை அறிந்து சேவையாற்றும் டாக்டர் சுப்பிரமணியம் போன்றவர்களின் தலைமைத்துவமே சிகாமாட் மக்களுக்குத் தேவை என்பதில் தாம் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment