Friday, 4 May 2018

'தன்னிகரற்ற சேவை; மக்கள் ஆதரவு'- அதுவே டத்தோஶ்ரீ சுப்ராவின் 'வெற்றி ரகசியம்'


ரா.தங்கமணி

சிகாமாட்-
நாட்டின் 14ஆவது தேர்தல் களம் தற்போது பரபரப்பை கூட்டியுள்ள நிலையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் போட்டியிடும் தொகுதி மீதான கவனம்  அரசியல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ள சிகாமாட் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு ஆதரவு அலை பெருகி வருகிறது  எனவும் வாக்காளர்களை அதிகம் கவர்ந்துள்ளதே அவரது 'வெற்றியின் ரகசியம்' எனவும் நம்பப்படுகிறது.

2004ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமின்றி மஇகாவின் தேசியத் தலைவராகவும் சுகாதார அமைச்சராகவும் இருந்து மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வந்துள்ளார் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்.

டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்தை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பில் தொழிலதிபர் எட்மண்ட் சந்தாராகுமாரும் பாஸ் கட்சியின் சார்பில் கைருல் ஃபைஸி அஹ்மாட் கமிலும் களத்தில் குதித்துள்ள நிலையில் டாக்டர் சுப்பிரமணியத்திற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

அண்மையில் சிகாமாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்,  ஜெமந்தா, கெமாஸ் பாரு, பூலோ கசாப், பத்து அன்னாம் ஆகிய பகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கடந்த தேர்தலில் ஆதரவு குறைந்து காணப்பட்ட இங்கு தற்போது 80 விழுக்காடு ஆதரவு பெருகியுள்ளது என கூறியுள்ளார்.

டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு ஆதரவு பெருகுவதற்கு அவரது மக்கள் சேவையே காரணம் என கூறப்படுகின்ற நிலையில் தனது தொகுதி மக்களுக்கு அவர் ஆற்றி வரும் சேவைகள் அவரை தோல்வியடையச் செய்யாது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாது அங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுப்பது, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என டாக்டர் சுப்பிரமணியம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

 எதிர்கட்சி வேட்பாளர் எட்மண்ட் சந்தாரா கடுமையான போட்டியை ஏற்படுத்தினாலும் கூட டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் எனவும் அதுவே அவரது 'வெற்றி ரகசியம்' ஆகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment