சிகாமாட்டில் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் மக்கள் நலன் கருதியும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இதுவரை பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக சிகாமாட் வாழ் மக்கள் கருத்து பகிர்ந்துள்ளனர்.
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதி முன்பை விட பல மடங்கு வளர்ச்சியடைந்திருப்பதாகவும் இவ்வளர்ச்சிக்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பங்கு அளப்பரியதாக அமைந்துள்ளது.
முதல் கட்டமாக சிகாமாட் மாவட்டத்தில் குறிப்பாக சுங்கை மூவாரில் வெள்ளத் தடுப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் சுங்கை கெனுவாங், சுங்கை சோடான், சுங்கை சிகாமாட், கெனுவாங் பால அமைப்பு மற்றும் சுங்கை சிகாமாட் சுற்று வழி மேம்பாடும் அடங்கும். ஏறக்குறைய 231 லட்சம் வெள்ளி செலவில் இந்த வெள்ளத் தடுப்புச்சுவர்களும் பிற கட்டமைப்புகளும் மக்களின் பாதுகாப்புக்காகவும் திடீர்
வெள்ள அபாயத்தை குறைக்கவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தற்போது, 11.1 லட்சம் வெள்ளி செலவில் ஸ்பாங் லோய் கிராமத்தில் அணை கட்டட நிர்மாணிப்புப் பணிகள், பூலோ காசாப் வட்டாரப் பணிகள், பத்து
அன்னாம், கம்போங் பாயா லாங்கில் வாய்க்கால் வழித் திட்ட நிர்மாணிப்புப் பணிகளும் மிகவும் சீராக நடைபெற்றுக் கொண்டிருகின்றன.
இதனை தவிர்த்து, அடுத்தக்கட்ட திட்டங்களாக ஏறக்குறைய 5.2 லட்சம் வெள்ளி செலவில் சிகாமாட் - சுங்கை சிப்புட் நடைப்பாதையைச் சீர்செய்யும் திட்டமும், சிகாமாட் - கிம்மாஸ் வட்டார கம்போங் லொபோக்- கெப்போங் பால நிர்மாணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்விரண்டு திட்டங்களும் தொடங்கப்படும் நிலையில் இருக்கின்றது.
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் டாக்டர் ச.சுப்பிரமணியம் மக்கள் தேவையை நன்கு உணர்ந்து அதற்கேற்ப சேவையாற்றி வந்துள்ளதாகவும் அவரின் சேவை இந்நாடாளுமன்றத் தொகுதியில் தொடர வேண்டும் என்பதே சிகாமாட் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
No comments:
Post a Comment