Monday 7 May 2018

சுங்கை சிப்புட் மக்களை எளிதில் கணித்திட முடியாது- சிவநேசன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வாக்காளர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் எந்த நேரத்தில் எத்தகைய முடிவை எடுப்பர் என்பதை யாராலும் கணிக்க முடியாது என சுங்காய் சட்டமன்ற பிகேஆர் வேட்பாளர் அ.சிவநேசன்  தெரிவித்தார்.

நாட்டின் முதலாவது தேர்தல் 1959இல் நடைபெற்றபோது துன் வீ.தி.சம்பந்தன் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற போதிலும் 1969ஆம் ஆண்டு தேர்தலில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். பின்னர் 1974 தேர்தலில் தேமு வேட்பாளராக களமிறக்கப்பட்ட துன் சாமிவேலு, துன் சம்பந்தன் ஆதரவாளர் எதிர்ப்பலையில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Advertisement

அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில்  2,000, 5,000, 15,000 வாக்குகள் என பெரும்பான்மையில் துன் சாமிவேலுவை வெற்றி பெறச் செய்த மக்கள், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,700 வாக்குகளில் தோல்வியடையச் செய்தனர்.

அதேபோன்று 2013 பொதுத் தேர்தலிலும்  தேசிய  முன்னணி வேட்பாளரை தோற்கடித்த இங்குள்ள வாக்காளர்கள், 2018 தேர்தலில் எத்தகைய முடிவை எடுப்பர் என்பர் யாராலும் கணிக்க முடியாது.

இங்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கியுள்ள எஸ்.கேசவன் ஒரு மாற்றத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறார். மக்கள் மாற்றத்தை விரும்பினால் நிச்சயம் இங்கு கேசவனை வெற்றியடைச் செய்வர் என அண்மையில் இங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment