Tuesday 15 May 2018

முதல் நாள் பணியை தொடங்கினார் பேரா மந்திரி பெசார்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொது தேர்தலுக்கு பின்னர், பேரா மாநில மந்திரி பெசாராக பதவிபேற்று கொண்ட முகமட் ஃபைசால் அஸுமு இன்று தனது முதல் நாள் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

மாநில அரசு செயலகத்திற்கு வருகை தந்த அவர், தனது பணியை தொடங்கும் விதமாக அதிகாரிகளை சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவார காலத்திற்குள் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சுல்தானின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.


No comments:

Post a Comment