Friday 5 January 2018

மஇகா ஏற்பாட்டில் புத்தகப்பைகள் அன்பளிப்பு; புத்தகப்பை பூரிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்று மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தேசிய மின்சார வாரியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தேசிய மஇகா மகளிர் பிரிவு ஆதரவுடன்  ஈப்போவில் உள்ள 6 தமிழ்ப்பள்ளியில் பயில்கின்ற  250 மாணவர்கள்க்கு பள்ளி புத்தகப்பைகள், பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
மஇகா தேசிய மகளிர் பிரிவுத் துணைத் தலைவியும் பேராக் மஇகா மகளிர் தலைவியுமான திருமதி தங்கராணி தியாகராஜன், ஈப்போ பாராட் செயலவை உறுப்பினர்களோடு  பள்ளி புத்தகப்பைகளை வழங்கினர்.

இன்றைய காலகட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்வதென்றால் அவ்வளவு பூரிப்பு ஒரு பக்கம் இருக்கையில்  புத்தகப்பைகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர்.
* எனக்கு புத்தகப்பை கிடைத்ததில் மிகவும் சந்தோசம் என்கிறார் மாணவர் உமேந்திரன்.

*  அம்மா வாங்கி தந்த புத்தகபையோடு இதுவும் புதிதாக சேர்ந்துள்ளது என்கிறார் தேவகுமரன்.

*   நன்றாக நான் படிப்பேன்; புத்தகப்பை அன்பளிப்பு மிகவும் பூரிப்பாக இருக்கிறது தேசிகன்.

* எங்கள் அனைவருக்கும் புத்தகப்பை கிடைத்தது மிகுந்த  மகிழ்ச்சி அளிக்கிறது என்கின்றனர் அகல்யா, தர்ஸ்ரீனி,ஷர்வினா.

No comments:

Post a Comment