Monday 22 January 2018

சாலை விபத்து; 4 ஆடவர்கள் பலி


ஈப்போ-

ஈப்போ டோல் சாவடி அருகே இரு மோட்டார் சைக்கிகள்கள், ஒரு வாகனத்தை உட்படுத்திய சாலை விபத்தில் 4 ஆடவர்கள் உயிரிழந்தனர்.

இன்று காலை நிகழ்ந்த இச்சாலை விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 4 ஆடவர்களான முகமட் ஹபிஸ் ஜபோன் (33), ரஃபிஹ் ஹஃபிஸி ரஹிமி (21), முஷின் முஹமட் வஷீர் (23), முகமட் ஷரிஃப் முகமட் சைட் (30) ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் ரஃபிஹ் ஹஃபிஸி, முகமட் ஷரிஃப்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடத்திலேயே உயிரிழந்த வேளையில் முகமட் ஹபிஸ், முஷின் ஆகியோர் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தனர் என ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

சிம்பாங் பூலாயிலிருந்து ஈப்போவுக்கு செல்லும்வழியில் இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் ஈஸ்வரா ரகக் காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் வாகனத்தை செலுத்திய ஆடவர் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment