Wednesday, 24 January 2018

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி அபாயம் இல்லை


ஜகார்த்தா-
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவான நிலநடுக்கம் உலுக்கியதில் அடுக்குமாடி கட்டடங்களில் வசித்து வந்த மக்களும் அலுவலக பணியாளர்களும் அலறி அடித்துக் கொண்டு கட்டடங்களிலிருந்து வெளியேறினர்.

சுமார் 3 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தால் தற்போது சுனாமி அபாயம் இல்லை என அமெரிக்காவின் புவியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயரமான கட்டடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டதால் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனிடையே, இந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்தோனேசியாவிலுள்ள மலேசிய தூதரம் டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment