Saturday 6 January 2018

மின்சுடலை நிர்வாகத்தின் அலட்சியம்; இயந்திரம் பழுதானதை முன்னரே அறிவிக்காதது ஏன்?


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மரணமடைந்த தனது சகோதரி மல்லிகாவின் உடலுக்கு ஈமச்சடங்குகள்  முடிந்த பின்னர் இயந்திரத்தில் தள்ளிய பின்னர் இயந்திரம் செயல்படவில்லை என பராமரிப்பாளர் கூறியது அதிர்ச்சியளித்ததாக மல்லிகாவின் சகோதரர் முருகன் தெரிவித்தார்.

மின்சுடலை இயங்கவில்லை என நிர்வாகம் முன்கூட்டியே தெரிவிக்காதது தவறு ஆகும். இது குறித்து தேவஸ்தான தலைவரிடம் சொன்னபோது அலட்சியமாக பதிலளித்துள்ளார்.ஒரு மின்சுடலைக்கு இருக்க வேண்டிய எவ்வித பராமரிப்பும் இங்கு இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இயந்திரத்தை பழுதுபார்க்க பொறியாளர் இல்லாதது, ஈமச்சடங்குகளை செய்பவரே இயந்திர கோளாறை சரி செய்வது, அனுபவம் இல்லாததால் சுடுநீரில் விழுந்து காயமடைந்தது என புந்தோங் மின்சுடலையில் பல அவலங்கள் நிகழ்கின்றன.

10 பிள்ளைகளுக்கு தாயான திருமதி மல்லிகாவின் ஈமச்சடங்கில் வேதனையும் அவலநிலையையும் ஏற்படுத்திய தேவஸ்தான நிர்வாகம் பொது மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என முருகன் கூறினார்.

No comments:

Post a Comment